"ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்படும் விவாகரத்து செல்லாது.. சட்டரீதியான விவாகரத்தே செல்லும்" - மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

0 500

ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்றும் சட்டரீதியாகப் பெறப்படும் விவாகரத்தே செல்லும் என்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ரயில்வேயில் தூய்மை பணியாளராகப் பணியாற்றிய குப்பம்மாள் என்பவர் 2001ஆம் ஆண்டு இறந்த நிலையில், கணவரைப் பிரிந்து அவருடன் வாழ்ந்து வந்த அவரது மகள் சரஸ்வதி, கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்குமாறு மனு அளித்தார்.

ஆனால் 1998ஆம் ஆண்டு பஞ்சாயத்தில் வைத்து விவாகரத்து பெற்ற சரஸ்வதி, தனது தாயார் குப்பம்மாள் இறந்தபிறகு 2010ஆம் ஆண்டுதான் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார்.

எனவே அவர் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments